--- --:--:-- --

பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு

10

டெல்லியில் சட்டமன்ற தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தலைநகர் எங்கும் போலீசாரும் துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் ஜாஃபர் பாத் பகுதியில் பைக்கில் ஹெல்மெட்டால் முகம் மறைத்து வந்த இரண்டு பேர் அங்கு இருந்த ஆயத்த ஆடை கடையை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

 

பின்னர் தாறுமாறாக மேலும் இரண்டு ரவுண்டு துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்கள் தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை. இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon