தருமபுரி அருகே கோவில் திருவிழாவில் தேர் முறிந்ததில் இரண்டு பேர் உயிரிழப்பு..! 5 லட்சம் நிவாரணம்..!
தர்மபுரி அருகே கோயில் திருவிழாவில் தேர் முறிந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிராமத்தில் காளியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து இந்த தேர் திருவிழாவை நடத்தினார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போது சக்கரத்தின் அச்சாணி முறிந்து விழுந்ததில் 5 பேர் சிக்கி கொண்டனர். அவர்களை போராடி மீட்ட மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன், சரவணன் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
மேலும் 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு 50ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.






