திருப்போரூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் படுகாயம்..!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். பேரூராட்சி அலுவலகம் எதிரே நேற்று இரவு சாலையில் குண்டு வெடித்ததையும் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணையில் இருவரும் செங்கல்பட்டு காந்தி நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் மற்றும் அன்வர் என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் இரண்டு வங்கி பாஸ்புக், அடையாள அட்டை இரண்டு பெரிய பட்டா கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். விக்னேசின் கைவிரல்கள் துண்டான நிலையிலும் அன்வர் முகத்தில் காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.







