google மேப் பார்த்து கார் ஓட்டியதால் ஆற்றுக்குள் கவிழ்ந்து இரு டாக்டர்கள் பலி..!
google மேப் பார்த்து கார் ஓட்டுபவர்கள் காருடன் ஆற்றில் கவிழ்ந்து பலியான சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொச்சி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர்களாக பணியாற்றியவர்கள் அத்வைத் மற்றும் அஜ்மல் இருவருக்கும் 29 வயதாகிறது.
சக மருத்துவர்கள் மூன்று பேருடன் நேற்று கொடுங்கல்லூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். இதில் இடையில் ஆற்றில் கார் கவிழ்ந்துள்ளது. இதில் காரில் இருந்த மருத்துவர்கள் இருவரும் பலியானார்கள். பின்னிருக்கையில் இருந்த மூன்று பேர் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர்.
அப்பொழுது கடும் மழை பெய்துள்ளது. இதனால் இருவரது உடலையும் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. விசாரணையில் கூகுள் மேப் இடது பக்கத்தில் திரும்ப காட்டியதாகவும் ஆனால் கவனக்குறைவாக நேரே சென்றதால் ஆற்றல் கார் விழுந்ததும் தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





