தி.மு.க கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு – ஒப்பந்தம் கையெழுத்து
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு (கொ.ம.தே.க) 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இரு கட்சிகளுக்கும் இடையே இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கொமதேக கட்சிக்கு 3 தொகுதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்தத் தேர்தலில் ஒரு தொகுதி குறைக்கப்பட்டு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



