கவரிங் நகைகளை வைத்து நூற்றுக்கும் அதிகமான முறை தங்க நகை கடன் பெறப்பட்டது தொடர்பாக இருவர் கைது..!
சென்னை நந்தனத்தில் உள்ள பொதுத்துறை வங்கியில் கவரிங் நகைகளை வைத்து நூற்றுக்கும் அதிகமான முறை தங்க நகை கடன் பெறப்பட்டது தொடர்பாக நகை மதிப்பீட்டாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கியின் நகை மதிப்பீட்டாளர் முதலில் தனது நண்பர்கள் மற்றும் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கவரிங் நகைகளை கொடுத்து வங்கியில் நகை அடகு கடன் செய்துள்ளார்.
தான் கொடுத்த கவரிங் நகைகளுடன் வங்கிக்கு வருபவர்களிடம் தங்க நகைப்போல் மதிப்பீடு கொடுத்து கடன் பெற்றுக் கொடுத்துள்ளார். இதற்காக நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் கமிஷன் தொகையை முரளி கொடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கவரிங் நகை மூலம் ஒரு கோடியே 2 லட்சம் ரூபாய் வரை மோசடி நடைபெற்றுள்ளது. காவலர் ஒருவரின் மனைவி 30க்கும் அதிகமான முறை முரளி கொடுத்த கவரிங் நகைகள் மூலம் பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் நகை மதிப்பீட்டாளர் மற்றும் காவலரின் மனைவியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.







