--- --:--:-- --

காவல்துறை அதிகாரிகளின் பெயரைப் பயன்படுத்தி பேஸ்புக்கில் நடந்த மோசடி..!

13

சென்னை காவல் துறையில் உதவி ஆணையராக உள்ள அதிகாரியின் பெயரையும், மேலும் சமூக வலை தளங்களில் இயங்கும் காவல்துறையை சேர்ந்தவர்கள் பெயரிலும் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தனது பெயரில் நடந்த இந்த மோசடி பற்றி அறிந்து உதவி ஆணையர் ஒருவர் தாம் பணிபுரியும் மாவட்ட செயலர் பிரிவில் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.

 

அதேபோல தெரிந்த நபர்களின் முகநூல் பக்கத்தில் இருந்தோ அல்லது வாட்ஸ் அப்பில் இருந்து பணம் அனுப்பும் படி நட்புப் பட்டியலில் இருப்பவர் யாரேனும் கேட்டால் சம்பந்தப்பட்ட நபரை செல்போனில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon