உலக அளவில் திடீரென முடங்கிய டுவிட்டர் செயலி..!
உலக அளவில் ட்விட்டர் செயலி திடீரென ஒரு மணி நேரத்திற்கு முடங்கியதால் பயனாளர்கள் அவதி அடைந்தனர். சமூகவலைதளங்களில் முன்னோடியாக உள்ள டுவிட்டர் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் முடங்கியது. இதனால் டுவிட்டரை பயன்படுத்த முடியாமல் பயனாளர்கள் அவதியடைந்தனர். இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் சேவை முடங்கியது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக முடங்கிய டுவிட்டர் பக்கம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்ததால் பயனாளர்கள் நிம்மதியடைந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாக தற்பொழுது நிலைமை சீரடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் தொழிநுட்ப கோளாறுக்கு பயனாளர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.





