லாரிகள் ஸ்டிரைக்: காய்கறிகள் விலை உயரும் அபாயம்!
டீசல் விலை உயர்வை கண்டித்து கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். 6 லட்சம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
சரக்கு பரிவர்த்தனை பாதிக்கப்பட்டிருப்பதால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக தக்காளி விலை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.





