இலங்கையில் தமிழர்களுக்கு அஞ்சலி..!
2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி இலங்கையில் ஈழப்போர் முடிவுற்றது. இதில், ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அந்த நாளை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மே 18-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, நேற்று இலங்கையில் உள்ள தமிழர்கள் இணைந்து, இறந்த தமிழர்களை நினைவு கூறினர். முள்ளிவாய்க்கால் மெமோரியல் முன்பு அவர்கள் அழுது கண்ணீர் விட்டது காண்போரை உருகச் செய்தது.





