--- --:--:-- --

இந்தியாவில் உருமாறிய கொரொனா பெருந்தொற்று பாதிப்பு 71ஆக உயர்வு..!

17

பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் உருமாறிய கொரொனா பெருந்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.

 

நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து சேர்ந்த சுமார் 33 ஆயிரம் பயணிகள் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

 

அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பிரிட்டனில் இருந்து திரும்பிய பயணிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 10 ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

 

பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 58 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் மேலும் 13 பேருக்கு தொற்று தாக்கியிருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon