சைடு ஸ்டாண்ட் எடுக்காமல் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்..!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சைடு ஸ்டாண்டு எடுக்காமல் சென்ற விவசாயி தடுமாறி விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஜமீன் கொல்லம் பகுதியை சேர்ந்த லிங்கம் என்பவர் இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது வாகனத்தின் சைடு ஸ்டாண்டு எடுக்காமல் சென்றதாக தெரிகிறது. இதனால் வளைவில் திரும்ப முற்பட்ட பொழுது சைடு ஸ்டாண்டு உரசியதால் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.





