சிறையில் மது சிறைவாசிகளுக்கு டார்ச்சர்..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறையில் மது அருந்தும் வீடியோ வெளியான நிலையில் தலைமை காவலரை பணியிடம் நீக்கம் செய்து சிறைக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சிறையில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் இவர் சிறையில் உள்ள கைதிகளின் உறவினர்களிடம் பணம் வாங்குவதாக புகார் எழுந்தது. அதுமட்டுமில்லாமல் இரவு பணியின் பொழுது மது அருந்திவிட்டு சிறைவாசிகளை தொந்தரவு செய்து வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.






