ஆரம்பத்தில் இந்த தப்பெல்லாம் பண்ணேன் எனக்கூறிய டாப்ஸி..!
ஆடுகளம் படத்தில் ஆங்கிலோ இந்தியன் பொண்ணாக வந்த டாப்சியை பார்த்து ரசிக்காத கண்களே இல்லை. க்யூட்டான முகம், சுருட்டை முடியில் இன்றைய தமிழ் தெலுங்கு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
டாப்ஸி பாலிவுட் போனதும் ஆளே மாறிவிட்டார். அழகான நடிகை என்று சொல்லப்பட்டதை மாற்றி அபாரமான நடிகை என்று திரையுலகை சொல்ல வைத்தார். டாப்ஸியின் இந்த மாற்றத்திற்கு இதுதான் காரணம் என்று டாப்சியே கூறியிருக்கிறார். தன்னுடைய ஆரம்பகால கதை தேர்வுகளில் சில தவறுகளை பண்ணியதாக கூறியுள்ளார்.
டாப்ஸி கதைகளை தேர்வு செய்வதில் அதிகம் வணிகப் படங்கள் தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நினைத்து அது மாதிரியான கதைகளை தேர்வு செய்ததாகவும், ஒரு ரசிகையாக தான் பார்க்க நினைக்கும் கதையம்சம் என நினைத்து நடிக்க தொடங்கியதாகவும் கூறியுள்ளார்.






