மின்னல் வேகத்தில் பழிவாங்கிய எருமை..!
மின்னல் வேகத்தில் பழிவாங்கிய எருமையின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில் நெடுஞ்சாலை ஒன்றில் எருது விடும் வண்டியின் போட்டி நடக்கிறது. முன்னால் சென்று கொண்டிருக்கும் வண்டியை முந்தி செல்ல இன்னொரு வண்டி முயல்கிறது.
பின்னால் வந்து கொண்டிருக்கும் அந்த வண்டியை ஓட்டிச் செல்லும் நபர் வேகத்தை அதிகரிப்பதற்காக தார் குச்சியால் எருமை மாட்டின் மீது குத்துகிறார். வலி தாங்க முடியாமல் அந்த எருமை மாடு வேகமாக ஓடத் துவங்குகிறது.
அதன் பலனாக முன்னால் சென்று கொண்டிருக்கும் வண்டியை நெருங்குகிறது இன்னும் வேகமாக சென்றால் முந்தி சென்று முதலில் வந்து விடலாம் என்று கருதி அந்த இளைஞர் மீண்டும் மீண்டும் தார் குச்சியால் எருமையை குத்துகிறார். இதனால் நேர்வழியில் செல்ல வேண்டிய வழியை விட்டு வேறு பக்கமாக சென்று கவிழ்ந்து விடுகிறது.
எருமைமாடும், அதிலிருந்து நான்கு இளைஞர்களும் பல்டி அடித்து கீழே விழுந்து விடுகின்றனர். தக்க தருணம் பார்த்து காலை வாரிவிட்ட எருமையின் செயலை பாராட்டியும் வண்டியை ஓட்டிச் சென்றவர் இரக்கமற்ற செயலை கண்டித்தும் நெட்டிசன்கள் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.





