பரபரப்பான அரசியல் சூழலில் தவெக இன்று முக்கிய ஆலோசனை கூட்டம்..!
தவெகவின் கொள்கைகள் அரசியல் அரங்கில் பேசுபொருளான நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27ஆம் தேதி நடைபெற்றதை தொடர்ந்து, கட்சியில் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணி வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 20 பேர் இதில் பங்கேற்ற நிலையில், அவர்களுடன் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆலோசனை நடத்தினார். நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் இரவு 8 மணி வரை நீடித்தது.
ஆயிரம் இருந்தாலும் விஜய் எனது தம்பி என முன்னர் குறிப்பிட்ட சீமான், த.வெ.க. மாநாட்டை தொடர்ந்து, எதிரியில் தம்பி என்று பார்க்க முடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார். மாநாட்டில் விஜய் கூறிய கருத்துகளுக்கு, சீமான் கொடுத்த பதிலடிகளை கொடுத்து வருவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் எழுந்துள்ளது.






