இன்றைய தங்கம் விலை நிலவரம்..!
புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்கிறது. தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு மேலாக தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,240க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து பொங்கல் தினமான இன்றும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,290க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,090க்கும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.310க்கும், கிலோவுக்கு மட்டுமே ரூ.3,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





