--- --:--:-- --

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்..! தமிழக சட்டப்பேரவை மார்ச் 9-ந் தேதி மீண்டும் கூடுகிறது!!

full

பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை மார்ச் 9-ந் தேதி கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தமிழக சட்டப் பேரவையில், 2020-20 21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த 14-ந் தேதி துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் 17-ந் தேதி முதல் 19 வரை நடைபெற்றது. விவாதங்களுக்கு 20-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் பதிலுரைத்த பின் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

 

இந்நிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் மார்ச் 9-ந் தேதி தொடங்கும் என சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும், எந்தெந்த துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் எந்தெந்த தேதிகளில் நடைபெறும் என்பதும் சபாநாயகர் தலைமையிலான அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும் எனத் தெரிகிறது.

 

அடுத்தாண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுதான் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Right Menu Icon