--- --:--:-- --

திருப்பூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பாலத்துக்குள் வெள்ளம்..! வாகன ஓட்டிகள் அவதி..!

திருப்பூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக  பாலத்துக்குள் வெள்ளம்..! வாகன ஓட்டிகள் அவதி..!

திருப்பூர் மாவட்டத்தில் இன்று கனமழை காரணமாக சிக்கண்ணா அரசு கல்லூரி சாலையில் உள்ள மரக்கடை பாலத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு பாலத்துக்குள் மழை நீரும் கழிவுநீரும் கலந்து வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

 

இதைக்கண்ட அப்பகுதி சமூக ஆர்வலர்கள் அப்பகுதியில் துப்புரவு பணியாளர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். துப்புரவு பணியாளர்கள் கழிவுநீர் கால்வாயில் உள்ள அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon