குளத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு..!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் குளத்தில் மூழ்கிய மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர். கேளம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் முகேஷ் மற்றும் உதயகுமார் ஆகியோர் நண்பர் விஜய்யுடன் சேர்ந்து திருப்போரூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
மூவரும் துணி துவைப்பதற்காக அங்குள்ள குளத்திற்கு சென்றனர். அப்பொழுது வழுக்கி விழுந்ததில் நீரில் மூழ்கி மூன்று பேரும் உயிரிழந்தனர். நீச்சல் தெரியாமல் இளைஞர்கள் மூன்று பேரும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





