--- --:--:-- --

வாக்காளர் பட்டியலில் திருத்த பணிகளுக்கான சிறப்பு முகாம்..!

1

மிழகத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் 17 லட்சம் பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

 

இதற்காக கடந்த 12, 13, 26 மற்றும் 27 ஆகிய நான்கு நாட்கள் தமிழக முழுவதும் நான்கு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் இந்த முகாம்களில் இதுவரை 17 லட்சத்தை 2,682 பேரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதில் பெயர் சேர்ப்பு மற்றும் 4 லட்சத்து 44 ஆயிரத்து 19 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வாக்காளர் பதிவு அலுவலக முகாம்களில் மட்டுமின்றி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் நேரடியாகவோ தேசிய வாக்காளர் சேவை இணையதளம் வாக்காளர் பதிவு செயலியின் மூலமும் திருத்த பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon