தோட்டத்திற்குள் புகுந்த மூன்று பாம்புகள்.. தண்ணீர் ஊற்றி பாம்பு பிடிவீரர் செய்த செயல்..!
மயிலாடுதுறை மாவட்டம் சோளம்பேட்டை கிராமத்தில் தோட்டத்தில் பதுங்கி இருந்த மூன்று சாரை பாம்புகள் மீட்கப்பட்டன. தோட்ட உரிமையாளர் குமார சாமி, பாம்பு பிடி வீரர் ஸ்நேக் பாண்டியனுக்கு தகவல் அளித்துள்ளார்.
கிராமத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர் கரையான் புற்றில் பாம்புகள் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தார். இதனையடுத்து அந்த புற்றில் தண்ணீரை ஊற்றி ஆறு அடி முதல் 7 அடி வரையிலான மூன்று சாரை பாம்புகளை மீட்டார்.






