கோவையில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மூன்று பேர் கைது..!
கோவையில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை ரயில்வே அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபொழுது அந்த வழியாக வந்த மூன்று பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம் நாட்டு துப்பாக்கி இருந்ததால் மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தினர். மூன்று பேரும் கூலி வேலை செய்பவர்கள் எனவும் குருவி சுடுவதற்காக நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
குருவி சுடும் துப்பாக்கியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





