ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோழி முட்டை கண்டுபிடிப்பு..!
இஸ்ரேலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோழி முட்டை உடையாமல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எம் டி நகர் ஆய்வின்போது கழிவுநீர் தொட்டியில் இருந்து தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த கோழிமுட்டையை எடுத்துள்ளனர்.
அந்த முட்டை இத்தனை ஆண்டுகளாக கெட்டுப் போகாமலும் சேதமடையாமல் இருப்பது ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஓட்டை பார்த்து அதன் பழமையை கண்டுபிடித்து ஆய்வாளர்கள் முட்டையின் அடிப்பகுதியில் லேசான விரிசல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கின்றனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து முட்டையுடன் பழங்கால பொம்மைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.







