ஒரே குடும்பத்தில் இரண்டு பேருக்கு மங்கி பாக்ஸ் வைரஸ்..!
இரண்டு பேருக்கு அரிதாக மங்கி பாக்ஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு வேல்ஸ் மாகாணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனிமைப் படுத்தப் பட்டுள்ள நிலையில் ஒருவருக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் உடனிருந்தவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியம்மை வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மங்கி பாக்ஸ் வைரஸ் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படுகிறது.
மங்கி பாக்ஸ் வைரஸ் கொல் உயிரி வகையை சேரா விட்டாலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் கொரொனா தொற்று போல் மற்றவர்களுக்கும் வேகமாக பரவாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வீக்கம், முதுகு வலி, தசைப்பிடிப்பு மற்றும் பொதுவான கவனக்குறைவு உள்ளிட்டவைகள் நோய்க்கான அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







