--- --:--:-- --

கொரொனாவை தடுப்பதற்கான விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம்..!

14.1

கொரொனா பரவலை தடுப்பதற்கான விதிமுறைகளை மீறுவோர்க்கு விதிக்கப்படும் அபராதத்தை யார் யார் வசூலிக்கலாம் என்ற விவரங்களை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

 

மாஸ்க் அணியாதது, தனிநபர் இடைவெளியை கடை பிடிக்காதது போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 200 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறையில் சுகாதார ஆய்வாளர் பதவிக்குக்கு கீழ் இல்லாதவர்களும் வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் பதவிக்கு கீழ் இல்லாதவர்களும், காவல் துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு கீழ் இல்லாதவர்களும் அபராத தொகையை வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon