தூத்துக்குடி ஆட்சியர் பெயர், புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி..!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெயரில் மோசடி செய்தவர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆட்சியர் செந்தில்ராஜ் புகைப்படம் மற்றும் பெயரை ஒருவர் வாட்ஸ் அப்பில் பயன்படுத்தி பணம் கேட்டு பலருக்கும் தகவல்கள் அனுப்பியதாக தெரிகிறது.
இது குறித்து தெரிய வரவே நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு ஆட்சியர் அறிவுறுத்தியதையடுத்து புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி பணம் கேட்டு வரும் தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
அது போன்ற தகவல்கள் வந்தால் உடனடியாக சைபர் குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.






