--- --:--:-- --

புயல் வரும் பாதை இதுதான்..!

1

மிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது.
வடதமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்கள் மற்றும் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

 

புதுச்சேரியி ல் லேசான மழை பதிவாகியுள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08:30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

 

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்.இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 3 ஆம் தேதி வாக்கில் புயலாக வலுப்பெற கூடும்.

 

அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 4ஆம் தேதி அதிகாலை வாக்கில் வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும்.

Right Menu Icon