--- --:--:-- --

சு.வெங்கடேசன் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதில்..!

1.1

தை பொங்கல் அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள பட்டயக் கணக்காளர் தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என மதுரை தொகுதி எம்.பி., சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் அன்று வணிகச் சட்டங்கள் தேர்வும், உழவர் திருநாள் அன்று திறனாய்வு என்று கூறப்படும் Quantitative Aptitude தேர்வும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள எம்.பி.சு.வெங்கடேசன், எத்தனை முறை சொன்னாலும் மத்திய அரசு திருந்தப்போவதில்லை என்றும் அதற்காக நாம் ஓயப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.மேலும், அறுவடைத் திருநாளான பொங்கல், தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்றும், அதை அவமதிக்கும் செயலை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவருக்கு தாம் கடிதம் எழுதியுள்ளதாகவும் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.இதற்கிடையே, இந்த குற்றச்சாட்டுக்கு “தமிழ் விரோதி” பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது” என்று கூறியுள்ளார்.

Right Menu Icon