திருவாடானையில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி: கல்லூரி மாணவ மாணவியர் திரளாக பங்கேற்பு!
திருவாடானையில் வாக்காளர் தின பேரணி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் 500 பேர் கலந்துகொண்ட வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணி திருவாடானை அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் இருந்து துவங்கியது.
இந்த பேரணியை திருவாடானை வட்டாச்சியர் சேகர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடன் மண்டல துணை வட்டாச்சியர் சேதுராமன், கல்லூரி பேராசிரியர் முனைவர் பழனியப்பன் கலந்து கொண்டார்கள். பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் தங்களது கையில் வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்தியும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்ப்பது, வாக்குகளை விற்பனை செய்ய மாட்டோம், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற கோசங்கள் எழுப்பியவாறு திருவாடான நகரை சுற்றி ஊர்வலமாக வந்தனர்.
இந்த பேரணியில் கிராம நிர்வாக அலுவலகர்கள், வட்டாச்சியர் அலுவலக பணியாளர், கல்லூரி பேராசியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.






