--- --:--:-- --

குழந்தைகளை பாதிக்கும் மூன்றாவது அலை-மருத்துவர்கள் எச்சரிக்கை..!

2

கொரொனா மூன்றாவது அலை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் சூழலில் டெல்லியில் அது குழந்தைகளை அதிகமாக பாதித்துள்ளது. டெல்லியில் கொரொனாவால் உடல்நலம் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

 

குழந்தைகள் வைத்திருப்போர் கொரொனா அறிகுறி தென்பட்டால் கவனமாக இருக்கும்படி பெற்றோருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகளுடன் கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 

இதனால் மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது. ஜனவரி 9 முதல் 12ஆம் தேதி வரை ஏழு குழந்தைகள் கொரொனாவால் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon