--- --:--:-- --

இந்த 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்!

2

திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று மிககன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையிலும் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. அதேப்போல கடும் வெயில் என்ற சூழல் மாறி தற்போது மேகமூட்டத்துடன் கூடிய வானிலை சென்னையில் தென்படுகிறது. தொடர்ந்து வரும் மாதங்களில் தீவிரமடையும் பருவமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி பல்வேறு கட்ட தயார் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வெள்ளம் ஏற்படும் சாத்தியமுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு அவசரத் தேவையின் நேரத்தில் தங்குமிட வசதிகள் அளிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த 169 இடங்கள் – பள்ளிகள், சமுதாய மையங்கள் போன்றவையாக இருக்கின்றன – குடிநீர், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன. கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், வடமேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், வடமேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Right Menu Icon