தமிழகம் முழுவதும் டோல்கேட் கட்டணம் இல்லை..!
தீபாவளியை முன்னிட்டு, 4 நாட்கள் விடுமுறை வருவதால் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்வார்கள். இந்த நேரத்தில், டோல்கேட்டுகளில் பெருமளவில் நெரிசல் ஏற்படும்.
இதன் காரணமாக, தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் 29, 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கூட்டநெரிசல் அதிகமாக இருந்தால், டோல்கேட்டுகளில் கட்டணம் வசூலிப்பதை தவிருங்கள் என நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.





