தவெகவின் கொள்கைகள் என்னென்ன..?
தவெகவின் முதல் மாநில மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி சாலை பகுதியில் நடைபெற்றது. மாநாடு மேடைக்கு வந்த விஜய் மக்கள் மத்தியில் நடந்து சென்று அவர்களைச் சந்தித்தார். பிறகு சுந்தந்திரப் போராட்ட வீரர்களுக்கும் மொழிப்போர் தியாகிகளுக்கும் மரியாதை செலுத்தி கொடியை ஏற்றினார். பிறகு தவெகவின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது.
தவெகவின் கொள்கையும் செயல்திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதன்படி கட்சியின் கொள்கையை பேராசியர் சம்பத்குமார் அறிவித்தார். அதன் விவரம் பின்வருமாறு:- மதம், சாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், பொருளாதாரம் என்ற தனிமனித அடையாள வேறுபாடுகளை களைதல்.தமிழே வழக்காடு மற்றும் வழிபாட்டு மொழி.விகிதாாச்சார அடிப்படையில் உரிமை. இரு மொழிக் கொள்கை. தமிழே ஆட்சி மொழி, வழக்காடு, வழிபாட்டு மொழி.
அரசு, தனியார் துறை லஞ்சமற்ற ஊழலற்ற நிர்வாகம் கொண்டு வருதல். போதை அறவே இல்லாத தமிழகத்தை படைத்தல். தீண்டாமை ஒழிமை- பழமைவாத பழக்கவழக்கங்கள் ஒழிப்பு.மாநில – மத்திய ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை, எதிர்த்து மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவது.சமத்துவம் – ஜாதி மதம், இனம், நிறம் பொருளாதாரம், பாலின சமத்துவத்துடன் கூடிய உரிமை எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள், மூன்றாம் பாலினத்தோர், மாற்றுத்திறனாளிகள் எல்லா விதத்திலும் மற்றவர்களுக்கு சமமானவர்களே இதுதான் சமத்துவம்.மத இன மொழி வர்க்கப் பேதமற்ற கல்வி சுகாதாரம் தூய காற்று தூய குடிநீர் என்பது கொள்கை.





