கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவரும் திட்டம் இல்லை..!
திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவரும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருமணம் அல்லது ஏமாற்றி கட்டாயமாக மதம் மாற்றுவதற்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தை உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் அண்மையில் கொண்டு வந்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் ஏற்கனவே இந்த சட்டம் உள்ளது. சட்டத்திற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்து பெண்களை திருமணம் செய்வதற்காக இஸ்லாமிய இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இதுபோன்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் என்று கேள்விக்கு மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில் மதமாற்றங்கள் அல்லது மதங்களுக்கு எதிரான திருமணங்களுக்கு எதிராக சட்டங்கள் கொண்டு வருவதற்கான எந்த எண்ணமும் மத்திய அரசிடம் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.







