--- --:--:-- --

உதவி கிடைக்காமல் சாலையிலேயே பலியான இளைஞர்..!

4.1

கேரள மாநிலம் கோழிக்கோட்டையை சேர்ந்தவர் நிஜாமுதீன். இவர் தனது இருசக்கர வாகனத்தில் மனப்பூர் அருகே வளஞ்சேரி பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது முன்னாள் சென்ற டேங்கர் லாரியை இடது புறம் வழியாக முன்னோக்கி செல்ல முயன்றார்.

 

இந்த சம்பவத்தில் நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் டேங்கர் லாரியின் பின்பக்கத்தில் மோதியதில் நிஜாமுதீன் தூக்கி வீசப்பட்டார். தொடர்ந்து சாலையோரம் கிடந்தவரை மருத்துவமனை கொண்டு செல்ல காலதாமதம் ஆனதால் பலியானார். வளாஞ்சேரி போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon