தூங்கிக் கொண்டிருந்த போது தவறி விழுந்த இளைஞர்..!
ஸ்ரீபெரும்புதூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பொழுது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து தொடையில் கம்பி குத்திய இளைஞர் மீட்கப்பட்டார். சுங்குவார்சத்திரம் அடுத்த கிராமத்தில் உள்ள கட்டடம் ஒன்றில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரேம் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
பணி முடிந்து இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த அவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். அப்பொழுது கட்டுமானப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த கம்பி குத்தி மறுபுறம் வெளியேறியதாக தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர் ஒரு மணி நேரம் போராடி இளைஞரை மீட்டனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் தொடையில் குத்தி இருந்த கம்பி அகற்றப்பட்டது.






