கல்லூரி மாணவியை ஓட ஓட விரட்டி வெட்டிய இளைஞர்..!
புனே நகரில் ஒரு தலை காதலால் நடுரோட்டில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி தாக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில சாலையில் தனது ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது இளைஞர் பைக்கை வழிமறித்துள்ளார். பின்னர் தன் கையில் வைத்திருந்த அறிவாளை எடுத்து அந்த இளைஞரை வெட்டியுள்ளார்.
இதை பார்த்து அந்த கல்லூரி மாணவி உயிரை காத்துக் கொள்ள ஓடியுள்ளார். ஆனாலும் விடாமல் விரட்டிய ஜாபர் அந்த மாணவியை வெட்டியுள்ளார். பரபரப்பான சாலையில் நடந்த இந்த சம்பவத்தை கண்ட மக்கள் அந்த இளைஞரிடமிருந்து கல்லூரி மாணவியை மீட்டனர்.
இதையடுத்து பொதுமக்கள் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





