--- --:--:-- --

பாஸ்ட் புட் கடையில் பயன்படுத்தக்கூடிய கட்டையில் இருந்த புழு..!

36

சென்னை கோயம்பேடு அருகே ஃபர்ஸ்ட் ஃபுட் கடையில் உபயோகப்படுத்தப்படும் சிக்கன் கறி மற்றும் காய்கறிகளை வெட்டும் கட்டையில் புழுக்கள் நெளிந்த புகார் தொடர்பாக அந்த உணவகத்திற்கு உணவுத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

நெற்குன்றத்தில் இயங்கி வரும் ரேணுகா ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் நேற்று உணவு வாங்க வந்த நபர் ஒருவர் கறியோடு சேர்ந்து புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து அவர் தனது செல்போனில் கறி வெட்டக்கூடிய கட்டை மற்றும் கறிகளில் புழுக்கள் இருந்ததை வீடியோவாக எடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புகார் தெரிவித்துள்ளார்.

 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கறி வெட்டக்கூடிய கட்டையில் புழு இருந்ததை கண்டனர். மேலும் உணவகம் முழுவதையும் ஆய்வு செய்து தரமற்ற இறைச்சிகள் உணவுப் பொருட்கள் இருந்ததை உடனடியாக பறிமுதல் செய்தனர்.

 

Right Menu Icon