பேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பிய பெண்..!
தேனியில் அமெரிக்க ராணுவ செவிலியராக பணியாற்றி வருவதாகக் கூறி ஓட்டல் ஊழியரிடம் 37 லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். முருகானந்தம் பேஸ்புக் பயன்படுத்திக் கொண்டிருந்த போது அதில் ஒரு பெண்ணின் பெயரில் குறுஞ்செய்தி வந்துள்ளது.
அந்த பெண்தான் அமெரிக்க ராணுவத்தில் செவிலியராக பணியாற்றி வருவதாகவும், அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது அங்கு இருந்தவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கைப்பற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த தொகையை செவிலியர்களுக்கு பகிர்ந்து அளிக்க உள்ளதாகவும் இதனால் தனக்கு 15 கோடி ரூபாய் வரை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த பணத்தை பார்த்துக்கொள்ள ஒருவர் வேண்டும் எனவும் அதற்கு கமிஷனாக நான்கு கோடி ரூபாய் தருவதாகவும் அவர் ஆசை காட்டி உள்ளார்.
பின்னர் முருகானந்தம் அந்தப்பெண் முன் பணம் கேட்டதை அடுத்து சுமார் 36 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முருகானந்தம் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.






