--- --:--:-- --

தாறுமாறாக திட்டிய பெண் எஸ்.ஐ.. கடுப்பில் பேசிய மணமகள்..!

10

திருமணம் நடைபெற இருந்த மணமகனை போலீசார் கைது செய்ய முயன்றதாக கூறப்பட்டதும் இதனால் உறவினர்களுடன் சேர்ந்து மணமகள் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

சென்னை அடுத்த பட்டாபிராமன் பகுதியைச் சேர்ந்த தினேஷ். சட்டக்கல்லூரி மாணவரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேஜா என்பவருக்கும் இடையே பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்றது.

 

மணமகன் திருமணத்திற்காக ஆங்காங்கே பேனர் வைத்துள்ளனர். இதை கண்ட போலீசார் பேனர்களை அப்புறப்படுத்துமாறு கூறி எச்சரிக்கை விடுத்ததாகவும் அவரது நண்பர்களும் திருமணம் முடிந்தவுடன் எடுத்து விடுவதாக கூறியதாக சொல்லப்படுகிறது.

 

இதனால் போலீசாருக்கும், மணமகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மணமகன் தினேஷை போலீசார் கைது செய்த முயன்றதாக தெரிகிறது. இதனால் மணமகள் தேஜா உறவினர்களுடன் சேர்ந்து போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Right Menu Icon