மாரடைப்பால் சாலையில் மயங்கி கிடந்த நபரை காப்பாற்றிய பெண் எஸ்ஐ..!
மத்திய பிரதேசத்தில் மாரடைப்பு ஏற்பட்டு சாலையில் மயங்கி கிடந்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பெண் SI ஒருவர் உயிரை காப்பாற்றியுள்ளார். சாலையில் மயங்கி ஒருவர் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற பெண் எஸ்ஐ அவருக்கு முததவி சிகிச்சை அளித்தார்.
இதையடுத்து மயக்கம் தெளிந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமுடன் இருக்கிறார். உரிய நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்த பெண்ணிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.





