பேருந்து முன் நின்று கொண்டு காசு கொடுத்தால் தான் போவேன் என அட்டூழியம் செய்த பெண்..!
ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை எனும் பகுதியில் அரசு பேருந்து நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் பொதுமக்கள், கடைக்காரர்கள் தவிர ஒரு சில மனநோயாளிகளுக்கு சுற்றித் திரிவதாக தகவல் கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் தான் தேன்கனிக்கோட்டை பகுதி பேருந்து நிலையத்தில் பேருந்து புறப்பட தயாராக இருந்த நிலையில் அந்த பகுதியில் இன்று மனநோயாளி ஒருவர் அந்த பேருந்தை மறைத்து நின்றுள்ளார். இதனை அறிந்து நடத்துனர் பேருந்து முன் பகுதிக்கு சென்று அந்த மன நோயாளி பெண்ணிடம் நகர்ந்து செல்லுமாறு கூறியுள்ளார்.
ஆனால் அதை கேட்காத அந்த பெண் காசு கொடு அப்போதுதான் செல்வேன் என அடம்பிடித்து இருக்கிறார். பேருந்தை எடுக்க முடியாமல் திணறிய அவர் ஆளைவிட்டால் போதும் என நடத்துனர் பையில் இருந்த சில்லறை காசுகளை அவரிடம் எடுத்துக் கொடுத்துள்ளார்.
காசுகளை நடத்துனர் கொடுத்த பிறகு அந்த பின் அங்கிருந்து நகர்ந்து சென்றிருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் மாவட்ட நிர்வாகம் இது போன்றவர்களை காப்பகங்களில் சேர்க்க நடவடிக்கையின் மேற்கொள்ள வேண்டும் என்பதை அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.





