மாயமான பெண்ணுக்கு நடந்த கொடூரம்..!
கடந்த 14ஆம் தேதி காணாமல் போன சென்னை புளியந்தோப்பை சேர்ந்த தீபா என்னும் இளம்பெண் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
அது தொடர்பான விசாரணையில் தேவராஜ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் பயணி விருந்து இளம் பெண் ஒருவரை தள்ளிவிட்ட வழக்கில் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணையில் ஹேமராஜூம் தீபாவும் நட்புடன் நெருங்கி பழகி வந்ததாகவும் இதில் தன்னை திருமணம் செய்து கொள்ள கூறி ஹேமராஜை தீபா வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. வயதை காரணம் கூறி திருமணம் செய்ய மறுத்த ஹேமராஜ் ஒரு கட்டத்தில் தொடர் வற்புறுத்தலால் தீபாவை தனியே வரவழைத்து தலையில் கல்லை போட்டுக் கொன்றதாக கூறப்படும் நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





