வெடித்து சிதறிய எரிமலை.. மலைக்க வைக்கும் காட்சிகள்..!
இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் லெவோடோபி எரிமலை வெடித்து சிதறிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன. சாம்பலுடன் வெளியேறிய புகை கடல் மட்டத்திலிருந்து 11 கி.மீ. உயரத்திற்கு மேலே சென்றது.
உடனடியாக 8 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை கொடுத்தனர். வானத்தில் காளான் முளைத்தது போல் சாம்பல் புகை காட்சி அளித்தது.





