பாரம் தாங்காமல் லாரி கவிழ்ந்து விபத்து..!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இளநீர் லோடு ஏற்றி கொண்டு வந்த லாரி பாரம் தாங்காமல் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. கணேசன் என்பவர் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் பல்வேறு இடங்களில் இளநீர் கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்தவர்.
இந்த நிலையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள தும்மல் பகுதியில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட தேங்காய்கள் லாரியில் ஆத்தூருக்கு எடுத்துவரப்பட்டது.
பழைய உடையான் பட்டியை சேர்ந்த ஓட்டுநர் லாரி ஓட்டி வந்த நிலையில் கொத்தம்பாடி பகுதியில் சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையின் வளைவில் திரும்பிய பொழுது வாரம் தாங்க முடியாமல் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.
இதில் லாரியின் பின்புறம் அமர்ந்திருந்த இரண்டு பேர் லேசான காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.






