--- --:--:-- --

facebook காதலால் நடந்த விபரீதம்.. இளம்பெண் படத்தை ஆபாசமாக சித்தரித்த காதலன்..!

6

தென்காசியில் இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை சேர்ந்தவருக்கும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு முகநூல் மூலமாக நட்பு ஏற்பட்டுள்ளது.

 

இருவரும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வருவதாக கூறப்படும் நிலையில், பெண்ணுக்கு வேறு ஒருருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் அந்த பெண்ணுடன் தொடர்பான துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் விரக்தி அடைந்ததாக தெரிகிறது.

 

இதனால் சம்பந்தப்பட்ட அந்த பெண் புகைப்படங்களை தவறாக சித்தரித்து பெண்ணின் உறவினர்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அந்த இளம் பெண் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

 

காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கைது செய்து தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon