திருமண நாளில் கடல் அலையில் சிக்கி மனைவி உயிரிழந்த பரிதாபம்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரையில் தம்பதிகள் இருவர் திருமண நாளை கொண்டாடிய போது ராட்சத அலையில் சிக்கி மனைவி உயிரிழந்தார். வேலூரை சேர்ந்த விக்னேஷ் மற்றும் வினி சைலா தங்களின் இரண்டாவது திருமண ஆண்டை கொண்டாடுவதற்காக பாலவாக்கம் கடற்கரை வந்துள்ளனர்.
நள்ளிரவு 12 மணி அளவில் கடலில் இறங்கி இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளனர். அதன்படி இருவரும் கடலில் இறங்கியபோது ராட்சத அலை வினி சைலாவை இழுத்து சென்றது. அதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு வினி சைலாவை தேடிய நிலையில் அவரது உடல் கரை ஒதுங்கியது.






