கணவன் வாங்கிய கடன்.. மனைவிக்கு அழுத்தம் கொடுத்ததால் நடந்த சோகம்..!
சென்னை அடுத்த கோகிலம்பாக்கம் அருகே கடன் தொல்லையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த கோபி – சிந்துஜா தம்பதியினர் கடன் பெற்று அரிசி வண்டி, 2 வீலர் ஷோரூம், எண்ணெய்க்கடை, ஏல சீட்டு போன்ற தொழில்கள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லைக்குள்ளான கோபி ஆந்திர மாநிலத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. கோபிக்கு கடன் கொடுத்தவர்கள் மனைவி சிந்துஜாவிற்கு அழுத்தம் கொடுப்பதால் மனமுடைந்தவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிந்துஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






