திருப்பரங்குன்றம் விவகாரம் – மதுரை கிளையில் இன்று விசாரணை
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர், கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு மதுரை கிளையில் இன்று விசாரணை நடக்க உள்ளது.
நேற்றைய விசாரணையின் போது தேவஸ்தானம் தரப்பு இந்து சமய அறநிலையத்துறை தரப்பு , சிக்கந்தர் தர்கா தரப்பு மனுக்கள் விசாரணை செய்யப்பட்டது. இன்று வக்பு வாரியம் மதுரை மாநகர காவல் துறை ஆணையாளர் மற்றும் ராம ரவிக்குமார் தரப்பு வாதங்கள் கேட்கப்பட உள்ளது.





